சுடரொளி

பரிதியை மேகம்

மறைத்திடும் நேரம்

மழை வரக்கூடும்

பூவிதழ்களின் மேலே

வண்டுகள் அமர்ந்து

ரீங்காரம் பாடும்

விடியலில்

குயில் தனியாய் அமர்ந்து

தனிமையை அருந்தும்

நெல்மணிகளைத் தின்னும் புறா

தூக்கியெறியப்படும்

இரையைக் கூட

கவண்கல்லாகவே நினைக்கும்

ஆளரவமற்ற வீதி

ஊருக்கு அந்நியமாக

நம்மை உணர வைக்கும்

கையிலேந்திய விளக்கு

இருளைக் கிழித்து

ஒளியைப் பரப்பும்

வெளிச்சம் காட்டும்

சுடரொளி தான்

வீட்டையும் எரிக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக