தடித்த வார்த்தைகளுக்கு
பிறகு பரிமாறப்பட்ட
தேநீர்
கசந்தது
கூண்டுப் புலியை
வெளியே திறந்துவிடுவது
போல்
தன் இணையை சாகடித்தவனை
அரவம் துரத்துவது போல்
கோபமும்,காமமும்
கூரிய வாளைப் போன்று
உறையில் தயாராய்
இருக்கிறது
ஆணவம் தான்
இன்னொருவரின் சிறகை
முறிக்கிறது
கோபத்தால்
குடுவையிலுள்ள அமிலம்
போன்று
இரத்தம் கொதிக்கிறது
காமம்
யாரை வலைக்குள்
வீழ்த்தலாமென்று
தன் பிளவுண்ட நாக்கை
வெளியே நீட்டிக்
கொண்டிருக்கும்
பணம் கொண்டு வந்தால் தான்
படுக்கையறையில் அனுமதி
என்று
மனைவி முகம் சுளிக்கும்
போது
பாரதம் பரத்தையர் தேசம்
ஆகிவிட்டதா
என்று தோன்றுகிறது
கோயில் கோபுரத்திலுள்ள
நிர்வாணச் சிலைகள்
என்னைப் போன்றவர்கள்
பார்த்து ரசிக்கத்தான்.
12 ஜூலை 2012
லேபிள்கள்:
t

0 கருத்துகள்: